நூல் - அறிவுலகின் திறவுகோல். !
நூல் - எழுத்துக்களின் மகப்பேறு. !!
நூல் - கையடக்கக் கதிரவன். !!!
இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவுக்கும் தகுதி வாய்ந்ததே நூலாகும். இவ்வளவு சிறப்புக்களை உடைய ஒரு நூலுக்கு ஆசிரியராய் இருப்பதென்பது அனைவருக்கும் கிடைக்கின்ற பேறல்ல.
இன்னல் பலகடந்து
இனிதே உருவாக்கி
வட்டிக்குப் பணம்வாங்கி
வலியுடனே வெளியிட்டு
எத்தனை விற்றதென
எண்ணிப் பார்க்கையிலே
அழவும் முடியாது
அழிக்கவும் தோன்றாது !!!
இப்படியெல்லாம் நொந்துபோன நிலையில் இருக்கையிலே, நண்பர் ஒருவர் சொல்வார் " செய்தித்தாள்களுக்கு அனுப்பிவைத்தால், அவர்கள் நூலைப் பற்றி மதிப்புரை வெளியிடுவார்கள். அது நூல் விற்பனைக்கு உதவுமென்று."
நூலும் அனுப்பிவைத்தார்.
நாளும் எதிர்பார்த்தார்.
தாளைப் புரட்டிப்புரட்டி
தோளும் வலித்ததென்றார்.
ஆறுமாத காத்திருப்புக்குப் பின் ஒருநாள் செய்தித்தாள் அலுவலகங்களுடன் தொலைபேசினார். அவர்கள் சொன்ன பதில் " ஐயா, ஒருநாளைக்கு 1000 க்கும் மேலான எண்ணிக்கையில் நூல்கள் வந்தவண்ணம் உள்ளன. நீங்கள் இன்னும் பல மாதங்கள் காத்திருக்கவேண்டும். "
ஆம், நண்பர்களே !. இன்றைய நூலாசிரியர்களின், பதிப்பாசிரியர்களின் அவல நிலை இதுதான்.
இந்நிலையை மாற்ற விரும்புகிறீர்களா?.
உங்களது நூல் பற்றிய மதிப்புரைகள்
உலகெங்கும் சென்றடைய விருப்பமா?
முகநூலில்
டுவிட்டரில்
இணையதளங்களில்
வாட்ஸப்பில்
எங்கும் தடையின்றி
தங்கும் வேரூன்றி
நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
உங்களது நூல்களின் இரண்டு பிரதிகளைக் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திருத்தம் பொன். சரவணன்
c/o. சைபர்நெட் சேவை மையம்
எஸ்.ஆர்.எஸ். வணிக வளாகம்
புதுக்கடை பஜார்
அருப்புக்கோட்டை - 626101.
விருதுநகர் மாவட்டம்.
மின்னஞ்சல்: vaendhan@gmail.com
நூல்களுடன் உங்களது கடிதத்தில் உங்களது முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சலைக் குறிப்பிடுங்கள். நூல் பற்றிய மதிப்புரைகள் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒருவாரத்திற்குள் அனுப்பிவைக்கப்படும். முகநூல், டுவிட்டர், வாட்ஸப், இணையதளங்களில் நீங்கள் விரும்பினால் பகிரப்படும்.
என்றும் அன்புடன்,
திருத்தம் பொன். சரவணன்.
http://www.facebook.com/thiruththam
https://twitter.com/thiruththam
http://www.thiruththam.blogspot.in
http://www.noolmathippurai.blogspot.com

அருமையான ஏற்பாடு.
ReplyDeleteநன்றி நண்பரே. :))
ReplyDeleteநண்பா என்று அழைக்கலாமா?,வயதில் மூத்தவராய் இருந்தால் மன்னிக்கவும். உங்களை போன்ற ஒருவரைத்தான் தேடினேன்.
ReplyDeleteதாராளமாக. தமிழை நேசிப்போர் அனைவரும் எனது நண்பர்களே. தயங்காமல் கேளுங்கள். :))
ReplyDelete